மார்ச் 3ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. IAS, IPS, IFS உள்ளிட்ட இந்தியாவின் உயர் பதவி நியமனங்களில் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாமல் உயர் சாதியினர்கள் அதிகம் நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன், மார்ச் 3ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி