25-வது நாளாக தொடரும் போராட்டம்.. 200 ஆசிரியர்கள் கைது

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று (ஜன.19) 25-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று எழும்பூரில் போராடிய 400 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி