தவெக தலைவர் விஜயின் உருவ பானையை உடைத்து போராட்டம்

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் லிங்கபெருமாள் தலைமையில் சென்னை துரைப்பாக்கம்- பல்லாவரம் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் விஜயை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் விஜயின் உருவ படம் ஒட்டிய பானையை உடைத்துவிட்டு கலைந்தனர்.

தொடர்புடைய செய்தி