அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: பிப்., 12-ல் நாடு தழுவிய போராட்டம்

நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் வரும் 12ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படவுள்ளதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், தானியங்கள், சோளம் போன்றவை இந்திய விவசாயத் துறையை பெரிதும் பாதிக்கும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கால்நடை தீவனம், சோயா எண்ணெய் இறக்குமதி செய்வதால், பால்வளத் துறையும் பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி