ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் இன்று (ஜூலை 31) மறியல் போராட்டம் நடைபெற்றது. குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோரான போலீஸ் தம்பதியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் திருமுருகன் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.