தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் நாளை (நவ.16) போராட்டம் நடத்தவுள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.