திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்காடு பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நிஷா(வயது 36) என்பவரை கைது செய்தனர்.