தமிழ்நாட்டில் "சண்டாளர்” என்ற சாதிப் பெயரை வசைப்பாடவோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48ஆவதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது. எனவே, பட்டியல் இனத்தில் உள்ள இந்த பிரிவினரை குறிக்கும் வார்த்தையை வசைப் பாடுவதற்கு பயன்படுத்த கூடாது, மீறி பயன்படுத்தினால் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.