மேற்குவங்கம் மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர், அங்கு பயிலும் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் ஹரிங்கட்டாவில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பல்கலை.யில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ உளவியல் துறையின் நாடக ஒத்திகைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என அந்த பேராசிரியை கூறிய நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.