வழக்கறிஞரான எல். முருகன், RSS அமைப்பில் இணைந்து தனது பொதுவாழ்வை தொடங்கி, தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணை தலைவராக பணியாற்றி பாஜகவில் தனது அரசியல் பயணத்தை வலுப்படுத்தினார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்று 'வேல் யாத்திரை' உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த இவர், பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். தற்போது கட்சியின் அமைப்பு பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சர் மற்றும் எம்பி பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.