தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: பெற்றோர் புகார்

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடமும் புத்தகங்கள், சிறப்பு கட்டணம் எனப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பள்ளிகள் தங்கள் கட்டண விவரங்களைப் பொதுவெளியிலும் இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்றும், இதைக் கண்காணிக்கத் தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி