அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முத்துக்குமாரின் உறவினர்கள் வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய வங்கி ஆவணங்கள் உட்பட 30 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க விசாரணை தீவிரமடைந்துள்ளது.