‘தனியார் செய்தி சேனல் முடக்கம்’ - இபிஎஸ் காட்டம்

அரசு கேபிள் டிவி-யில் இருந்து தனியார் செய்தி சேனல், திமுக அரசால் முடக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், “பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட திமுக அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் 4 ஆம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு” என்றார்.

தொடர்புடைய செய்தி