திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.