சென்னையில் காவலர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் குறித்தான் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் கைதிகளை ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் புழல் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, வாகனத்தில் இருந்த காவலர் ஒருவர் கைதியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற கைதிகள், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நன்றி: polimer