தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள், காவலர்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களில் ஒருவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் பறித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 200 கைதிகள் மட்டுமே அடைக்கும் வசதி கொண்ட அச்சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களைக் கண்காணிக்க வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.