புழல் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்

சென்னை ஜே.ஜே. நகர் காவல் துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டை சேர்ந்த விசாரணை கைதி சுதீப் மொஹாட்டி திடீரென சிறையிலிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறை காவலர்கள் உடனடியாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து, பலத்த பாதுகாப்புமிக்க மத்திய சிறையில் இருந்து கைதி எப்படி தப்பி செல்ல முடிந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕