சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நரேஷ் குமார், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அழைத்து வரப்பட்டபோது தப்பியோடியுள்ளார். பெருந்துறை அருகே நள்ளிரவில் காவலர்கள் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, அவர்களை தள்ளிவிட்டு கைதி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கைதியை பிடிக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி