ரயிலில் பெட்ஷீட் திருடினால் சிறை தண்டனை

ரயில்களில் வழங்கப்படும் தலையணை மற்றும் பெட்ஷீட்களை பயணிகள் எடுத்து சென்றால், ரயில்வே சொத்து சட்டம் 1966-ன் படி ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் மட்டும் ஓராண்டில் சுமார் 1.95 லட்சம் துண்டுகள் மற்றும் 81,000-க்கும் மேற்பட்ட பெட்ஷீட்கள் திருடு போயுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச்சொத்தை திருடுவது சட்டப்படி குற்றம் என்பதால், பயணிகள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி