கோடை விடுமுறையில் குழந்தைகளை பணியில் அமர்த்தினால் சிறை

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 வருட சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி