JEE தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடி-யில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரி, தனக்கு அரசு வீடு வழங்க வேண்டும் என ஊடகத்திற்கு தான் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வர், சேலம் சுற்றுப் பயணத்தின் போது ராஜேஷ்வரியை நேரில் அழைத்து, பொன்னாடை அணிவித்து, வீடு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியை வழங்கி உள்ளார்.