பிரதமர் வேட்பாளர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த புதிய விளக்கம்

"மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். தவெக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று (செப்.9) செய்தியாளர்களைச் சந்தித்தன. அப்போது பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியா, தமிழ்நாட்டில் இருந்தும் பிரதமர் வேட்பாளர்கள் உருவாக வேண்டும்” என்றார். முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என CM விஜயை குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕