பாரத பிரதமர் கல்வி உதவித் தொகை

12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு தொழிற்கல்விக்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000-மும், மாணவிகளுக்கு ரூ.36,000-மும் உதவித்தொகையாக வழங்கப்படும். ஆன்லைனில் செப்.1 முதல் நவ.30 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு www.ksb.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி