"அதிமுக ஒன்றுபட வேண்டுமென பிரதமர் மோடி விரும்புகிறார்" - ஓபிஎஸ்

அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கட்சியை ஒன்றிணைக்கும் நல்ல எண்ணத்தில் தான் செங்கோட்டையன் செயல்பட்டார். ஆனால் சொந்த விருப்பு, வெறுப்புக்காக கட்சி ஒன்றுபடுவதை ஒருவர் தடுக்கிறார். அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர்” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி