சேலத்தில் நடைபெற்ற சேலம்–நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மையக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றும், இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். பிப்.28-ம் தேதி மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
நன்றி: தந்தி