தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 3 கட்டங்களாக தமிழகம் வருகை தருகிறார். இதன்படி மார்ச் 1-இல் மதுரையிலும், மார்ச் 6-இல் வேலூரிலும் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். பிரதமரின் இந்த அடுத்தடுத்த வருகை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:News18