தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் 2 முறை தமிழகம் வரவுள்ளார். அதன்படி, மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் பிரம்மாண்டமான தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மற்றொரு தேர்தல் பரப்புரை கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.