அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள சென்னை பூங்கா ரயில் நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை.17) காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரயில் நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.