தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், NDA கூட்டணிக்கு ஆதரவாக இன்று (ஏப்.15) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடுஷோ மேற்கொண்டு வருகிறார். வெப்பமூடு தொடங்கி வடசேரி வரை ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு பிரதமர் ரோடுஷோ நடைபெறுகிறது. அவருடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் உடன் இருக்கின்றனர். அவர்களுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நன்றி: ians_india