கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையொட்டி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று (டிச., 25) நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களின் நலனுக்காக பிரார்த்தனை மேற்கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கிறிஸ்துமஸ் அன்பு, அமைதி மற்றும் இரக்கம் ஆகியவற்றின் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்தது. அதன் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி