மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதங்கள் விலை அதிகரிப்பு

15 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதங்கள் விலையேற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ.10க்கு விற்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு ஆகிய பிரசாதங்கள் ரூ.15 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.21க்கு விற்கப்பட்டு வந்த மஞ்சள் பை மட்டும் ரூ.15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக 50% விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி