ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலைகள் உயரப் போகின்றன. வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக், நோய் எதிர்ப்பு மாத்திரைகள், பாராசிடமால், அசித்ரோமைசின், வைட்டமின், மினரல் மருந்துகளின் விலைகள் கணிசமாக உயரவுள்ளன. மருந்து உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், மத்திய அரசு சுமார் 1000 மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.