மளிகைப் பொருட்கள் விலை அதிரடி உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து மற்றும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.100 உயர்ந்து ரூ.11,700 முதல் ரூ.12,300 வரை விற்பனையாகி வருகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.9,300 முதல் ரூ.9,400 வரை விற்பனையானது. பட்டாணி 100 கிலோ ரூ.200 குறைந்து ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை விற்பனையானது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடும் முழுவதும் இந்த விலை ஏற்றமானது இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி