புதிய பி.இ.இ (BEE) விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஏசி மற்றும் பிரிட்ஜ்களின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயரவுள்ளது. புதிய விதிமுறைகளின்படி ஸ்டார் ரேட்டிங் தரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதால், அதே தரத்தை எட்ட உற்பத்தி செலவு அதிகரிப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் விலை அதிகரிப்பிற்கு மற்றொரு காரணியாக அமைந்துள்ளது.