543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாகக் குறைப்பு

மார்பகம், கருப்பைவாய், புரோஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கான 137 மருந்துகளின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்சம் 30% ஆக நிர்ணயித்துள்ளது. இதனால் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 20% முதல் 70% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விலைக் குறைப்பு நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை சேமிப்பு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕