"Kinmemai" என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து மற்றும் சுவை இருப்பதுடன், சமைப்பதற்கு முன் இதை கழுவ வேண்டியதில்லை என்பதால் நேரமும் தண்ணீரும் மிச்சமாகிறது. இதன் 1 கிலோ அரிசியின் விலை ரூ.12,000 ரூபாய்க்கு விற்கப்படுவதால், இது உலகின் காஸ்ட்லியான அரிசி என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.