தென் கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பரில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்ததை தொடர்ந்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க அவர் முயன்றதாக புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.