பொதுக்கூட்டங்களுக்கு முன்வைப்புத்தொகை: எஸ்டிபிஐ கண்டனம்

தமிழக அரசு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோட் ஷோக்களுக்கு முன்வைப்புத் தொகை மற்றும் 15 நாட்களுக்கு முன் அனுமதி போன்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இது சிறிய கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படை உரிமைகள் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசு மற்றும் காவல்துறையின் கடமை பாதுகாப்பு வழங்குவதே என்றும், வைப்புத் தொகை ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி