மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் என்பது அனைவருக்கும் பொதுவான இயற்கை சொத்து என்பதால், தமிழக மக்களின் உரிமையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.