மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று (செப்.28) மதுராந்தகத்தில் நெல்வாய்கூட்டு ரோடு, எண்டத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, எலப்பாக்கத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, அக்.1 அன்று தாராபுரத்தில் மூலனூர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அலங்கியத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.