சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெல் அறுவடை வாகனம் ரிவர்ஸில் இயக்கப்பட்டபோது பைக் மீது மோதியதால் கர்ப்பிணி உயிரிழந்தார். தாகியார் நகரைச் சேர்ந்த 21 வயது பெண் சோனியா காந்தி, தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அவர்களுக்கு முன்பு சென்ற நெல் அறுவடை வாகனம், திடீரென பின்புறமாக ரிவர்ஸில் இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் இருந்த பைக் மீது மோதி விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில், சோனியா காந்தி உயிரிழந்தார்.
நன்றி: பாலிமர்