கேரளா: திருச்சூர் மாவட்டம் வெள்ளாங்குலத்தைச் சேர்ந்த ஃபஸீலா 23 என்ற கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஃபஸீலா தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது தாயிடம் அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ செய்தியில் “நான் சாகப்போகிறேன், இல்லையெனில் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள்” என கூறியுள்ளார். மேலும், தனது கமவர் வயிற்றில் ஓங்கி அடித்தும், கை முறிந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, ஃபசீலாவின் கணவர் நௌபால் மற்றும் அவரது தாயார் ரம்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.