2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை முதல் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளுக்கும் வரும் 14-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.