தமிழகத்திற்கான மாநிலங்களவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தப்படி இவருக்கு இப்பதவி ஒதுக்கப்பட்டது. இவரைத் தவிர களம் கண்ட மற்ற 12 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18