டெல்லி கார் வெடிப்பு குற்றவாளிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட யாரும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நவ.10ஆம் தேதி இரவு பயங்கர கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.