விஜய் தனித்து நிற்கவே விரும்புகிறார். அது மாறும் என தோன்றவில்லை. டிசம்பர் வரை கூட்டணி கிடையாது என உறுதியாகச் சொல்ல முடியும். நிலைமை மாறினால் அதற்கு ஏற்றவாறு ஜனவரியில் முடிவெடுப்போம். அடுத்த 6 முதல் 8 மாதங்கள் விஜய் தீவிரமாக களமாடுவார். அதன் பிறகு கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி முடிவெடுப்போம். தீவிரமாக உழைத்தால், உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினால் விஜய் தனித்து ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.