"நான் முதல்வன்" திட்டத்தில் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கும், மதுரை, கோவை மண்டலத்தில் தலா 350 மாணவர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி