பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முழு வட்டியையும் பெற நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்வது அவசியமாகும். 5-ம் தேதிக்கு பிறகு செய்யப்படும் முதலீடுகளுக்கு அந்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படாமல், அடுத்த மாதத்தில் இருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போது இத்திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த வட்டி தொகை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று பயனாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.