வேலூரில் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாகப் பத்திரிகையாளர்கள் தங்களது செல்போன் டார்ச் வெளிச்சத்தைக் காட்ட, அவர் பேட்டியைத் தொடர்ந்தார். "மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ளது" என முந்தைய நாள் பேட்டியில் அவர் கூறியிருந்த நிலையில், அடுத்த நாளே அவர் பேசும்போது மின்தடை ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி: சன் நியூஸ்