12 வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மின்தடை ரத்து

தமிழகத்தில் நாளை தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு முடியும் வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்படுவதுடன், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் பகல் நேர மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர பழுதுகள் ஏற்பட்டால் மட்டும் உயர் அதிகாரிகள் அனுமதியுடன் குறுகிய நேரத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி